இந்தியா

பயிர் நிதியுதவி வழங்க தெலங்கானா அரசுக்கு தற்காலிக தடை!

தெலங்கானாவில் விவசாயிகளுக்கு ராபி பயிர் நிதியுதவி வழங்குவதற்கு தற்காலிக தடை விதித்து இந்திய தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

DIN

தெலங்கானாவில் விவசாயிகளுக்கு ராபி பயிர் நிதியுதவி வழங்குவதற்கு தற்காலிக தடை விதித்து இந்திய தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிகட்டப் பிரசாரத்தை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையே, ராபி பயிர் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 5,000 நிதியுதவி வழங்கும் மாநில அரசின் திட்டத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது. அதன்படி, விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று நிதியுதவி வரவு வைக்கப்படும் என்று முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நிதியுதவி வழங்கும் திட்டத்தை ஆளும் பிஆர்எஸ் கட்சியின் எம்எல்ஏவும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருமான ஹரிஸ் ராவ் விளம்பரப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து பயிர் நிதியுதவி திட்டத்துக்கு அளித்த அனுமதியை இந்திய தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றது. விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் பணம் வரவு வைக்க தேர்தல் முடியும் வரை தற்காலிக தடை விதிப்பதாக தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT