நாட்டில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிப்பதற்கு ஏற்ப சைபர் குற்றங்களும் அதிகரித்துக் கொண்டே இருப்பதை மத்திய, மாநில அரசுகளின் புள்ளிவிவரங்களும், பல்வேறு ஆய்வுத் தகவல்களும் உறுதிப்படுத்துகின்றன. அது தொடர்பான ஒரு பார்வை...
- நாடு முழுவதும் 113 கோடி கைப்பேசிகளை மக்கள் பயன்படுத்துகின்றனர்.
- நாட்டின் மொத்த மக்கள்தொகையில் பாதிபேர் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்.
- அறிதிறன்பேசி வைத்திருப்போர் ஒரு நாளுக்கு சராசரியாக 2 மணி நேரம் 15 நிமிஷம் செயலிகளில் செலவிடுவதாக சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- அறிதிறன்பேசியை 45 சதவீதம் பேர் பணப் பரிவர்த்தனைக்கு பயன்படுத்துகின்றனர்.
- சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது 76.8 சதவீதம் அதிகரிப்பு.
- சைபர் குற்றம் தொடர்பாக கடந்த ஆண்டு சுமார் 6 லட்சம் புகார்களை பொதுமக்கள் அளித்துள்ளனர் என மத்திய குடிமக்கள் நிதி, சைபர் மோசடி புகார் மற்றும் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
- சைபர் குற்றங்கள் கடந்த 3 ஆண்டுகளில் நாட்டில் 350 சதவீதம் அதிகரித்துள்ளது.
- சைபர் குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 50 சதவீதம் வரை அதிகரிப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது.
- மோசடி அழைப்புகளும், மோசடி குறுஞ்செய்திகளும் ஆண்டுக்கு 18 சதவீதம் வரையில் அதிகரிக்கிறது.
- ஒருவரது கைப்பேசி எண்ணுக்கு சராசரியாக ஒரு மாதத்துக்கு 61 மோசடி அல்லது தேவையற்ற அழைப்புகள் வருகின்றன.
- புதுதில்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஆண்டுக்கு 17 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை கணினி,
- அறிதிறன்பேசி மூலம் நடைபெறும் பணம் மோசடிகள் அதிகரிக்கின்றன.
- 59 சதவீதத்தில் இருந்து 70 சதவீதம் வரையிலான வழக்குகளின் விசாரணை நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் சைபர் குற்றங்களில் தொடர்புடைய 19,654 கைப்பேசி எண்கள் காவல்துறையால் முடக்கப்பட்டுள்ளன.
- 17 சதவீதத்தில் இருந்து 31% வரையிலான வழக்குகள், தடயங்கள் கிடைக்கவிலலை, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை, துப்புதுலக்க முடியவில்லை என முடித்து வைக்கப்படுகிறது.
- 4 சதவீத்தில் இருந்து 10% வரையிலான வழக்குகளிலேயே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது.
- யுபிஐ பணப் பரிவர்த்தனையில் மட்டும் மாதந்தோறும் ரூ.200 கோடி அளவில் மோசடிகள் நடைபெறுகின்றன.
- நாட்டில் 46.7 கோடி பேர் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர்.
- சைபர் குற்றங்களால் ஒரு நாளுக்கு மக்கள் பணம் ரூ.100 கோடி பறிபோவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
- கணினி, கைப்பேசி உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மூலமாக 35 வகையான சைபர் குற்றங்கள் நடைபெறுகின்றன.
- ஒரு சதவீதத்துக்கு குறைவான சைபர் குற்ற வழக்குகளிலேயே குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கிறது.