அஸ்ஸாம்: 15 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்!
அஸ்ஸாம் மாநிலத்தில் 15 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டு இருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அஸ்ஸாம் மாநிலம் காம்ருப் மாவட்டத்தில் 15 கோடி மதிப்பிலான ஹெராயின் வைத்திருந்த இருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அஸ்ஸாம் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய இந்தச் சோதனையில் 1.8 கிலோ மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், குற்றவாளிகள் வண்டியை நிறுத்தாமல் தப்பிக்க முயற்சி செய்தபோது, காவல்துறையினர் வண்டியின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திக் குற்றவாளிகளை மடக்கிப்பிடித்தனர் எனக் காவல்துறைத் துணைத்தலைவர் பார்த்த சாரதி மகந்தா தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: உ.பி.: சட்டப்பேரவைக் குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்!
Advertisement
Advertisement
கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் மணிப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட இருவரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.