இந்தியா

மணிப்பூர் வன்முறை பற்றி புத்தகம் எழுதியவர் மீது வழக்கு!

DIN

மணிப்பூர் வன்முறையைப் பற்றி மணிப்பூர் ஃபைல்ஸ் (மணிப்பூர் கோப்புகள்) என்கிற புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் பிரணவானந்த தாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் மாநிலம் சில்சார் பகுதியைச் சேர்ந்த இந்த எழுத்தாளர் மீது இரு சமூகத்தினருக்கிடையே பகைமையை வளர்க்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தில் வெறும் ஒரு பக்கத்தின் நியாயத்தை மட்டுமே கூறி இரு சமூகத்தினருக்கு இடையே வெறுப்பை வளர்க்க பிரணவானந்த தாஸ் முயற்சிக்கிறார் என கங்லேயபாக் கன்பா லுப் என்ற அமைப்பின் இளைஞரணித் தலைவர் புகார் செய்துள்ளார்.

அஸ்ஸாம் மாநிலம்  சேர்ந்த இந்த எழுத்தாளர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்திலிருந்து நடந்துகொண்டிருக்கும் மெய்தி மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையேயான இந்தப் பிரச்னையில் இதுவரை 180க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போலி நகைகளைக் கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி: 4 போ் கைது

ஹிமாசல பிரதேசம்: மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் மனு தாக்கல்

சிபிஎஸ்சி 10-ஆம் வகுப்புத் தோ்வு: எஸ்ஆா்வி பப்ளிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பாராட்டு...

பல்லடத்தில் பெண்ணைத் தாக்கியவா் கைது

SCROLL FOR NEXT