கிஷண் ரெட்டி (கோப்புப் படம்) 
இந்தியா

தெலங்கானாவில் பணம், மது விநியோகம்: காங்கிரஸ், பிஆர்எஸ் மீது ஜி கிஷன் ரெட்டி குற்றச்சாட்டு

தெலங்கானாவில் பணம், மது விநியோகம் செய்யப்படுவதாக காங்கிரஸ், பிஆர்எஸ் ஆகிய கட்சிகள் மீது மத்திய அமைச்சரும், மாநில பாஜக தலைவருமான ஜி கிஷன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.

DIN

தேர்தல் நடைபெறவிருக்கும் தெலங்கானாவில் பணம், மது விநியோகம் செய்யப்படுவதாக காங்கிரஸ், பிஆர்எஸ் ஆகிய கட்சிகள் மீது மத்திய அமைச்சரும், மாநில பாஜக தலைவருமான ஜி கிஷன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.
மொத்தம் 119 இடங்களைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு நவ. 30-ஆம் தேதி(நாளை) தேர்தல் நடைபெற உள்ளது. முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி, தனது அரசு கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்து ஆட்சியைத் தக்க வைக்க தீவிரமாக உள்ளது. 
ஆட்சிக்கு எதிரான மனநிலையையும், ஆட்சியின் தோல்விகளையும் முன்னிறுத்தி வெற்றி பெற முக்கிய எதிர்க்கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் வியூகம் வகுத்துள்ளன.
 இந்த நிலையில், தெலங்கானாவில் பணம், மது விநியோகம் செய்யப்படுவதாக காங்கிரஸ், பிஆர்எஸ் ஆகிய கட்சிகள் மீது மத்திய அமைச்சரும், மாநில பாஜக தலைவருமான ஜி கிஷன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, நேற்று காலை முதல் பல்வேறு கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சியினர் பணம் விநியோகம் செய்து வருகின்றனர். அதை தடுக்க வேண்டியது தேர்தல் ஆணையம் மற்றும் அதிகாரிகளின் கடமை. தேர்தல் அமைதியாக நடக்க வேண்டும். சுதந்திரம் இருக்க வேண்டும்.
எனவே, மது விநியோகத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறேன். அதிகாரி இருந்தும் இதுபோன்ற பணிகள் நடந்தால், அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் அமைதியாகவும், நியாயமாகவும் நடைபெற வேண்டும் என்றார்.
மேலும், மக்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்தி, தெலங்கானாவில் நல்ல ஆட்சியை கொண்டு வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெமனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

கோவையில் வெளியிடப்படும் இட்லி கடை டிரைலர்..! எப்போது?

SCROLL FOR NEXT