உத்தர பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் நடந்த திருமண ஊர்வலம் ஒன்றில், சகோதரர்கள் இருவர் திருமணத்தில் கலந்துகொண்ட ஆறு விருந்தினர்களால் குத்திக் கொல்லப்பட்டுள்ளனர்.
குற்றம் புரிந்த ஆறு பேரையும் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஷாகஞ்ச் வட்டார காவல் அதிகாரி சுபம் தோடி பேசுகையில், இந்தச் சம்பவம் செவ்வாய்கிழமை இரவு 11 மணிக்கு நடந்ததாகவும் திருமண ஊர்வலம் கேத்தாசரை நகரத்தை வந்தடைந்த பிறகு, அஜய் பிரஜபதி மற்றும் அவரது சகோதரர் அங்கித் இருவரையும் அதே விழாவில் கலந்து கொண்ட ஆறு விருந்தினர்களும் மது அருந்துவதற்காக அணிகியுள்ளனர்.
இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இரு சகோதரர்களையும் ஆறு பேர் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் எனத் தெரிவித்தார்.
மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட சகோதரர்கள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். உடற்கூராய்வுக்கு அவர்களின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அம்பானியை விட பணக்காரர்.. வாடகை வீட்டில் வசிக்கும் அவலம்! சர்ச்சையில் ரேமண்ட் குழுமம்!!
அடுத்த 5 மணி நேரத்தில் குற்றவாளிகளைக் காவல் துறையினர் சிறிய என்கவுண்டர் மேற்கொண்டு கைது செய்துள்ளனர். இதனால் ஆறு பேரில் மூவரின் கால்களில் துப்பாக்கி காயங்கள் ஏற்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.