உ.பி: பொதுக் குழாயில் தண்ணீர் குடித்ததற்காக தலித் இளைஞர் அடித்துக் கொலை
உத்திர பிரதேசத்தில் பொதுக் குழயில் தண்ணீர் குடித்ததற்காக தலித் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாஉ.பி: பொதுக் குழாயில் தண்ணீர் குடித்ததற்காக தலித் இளைஞர் அடித்துக் கொலை
உத்திர பிரதேசத்தில் பொதுக் குழயில் தண்ணீர் குடித்ததற்காக தலித் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேசத்தில் பொதுக் குழயில் தண்ணீர் குடித்ததற்காக தலித் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் படவுன் மாவட்டத்தில் உள்ள சத்ரா கிராமத்தில் தலித் இளைஞர் கமலேஷ்(24) அங்குள்ள பொதுக் குழாயில் திங்கட்கிழமை இரவு தண்ணீர் குடித்துள்ளார்.
அப்போது அப்பகுதியில் இருந்த சூரஜ் ரத்தோர் மற்றும் அவரது கூட்டாளிகள் தண்ணீர் குடித்ததற்காக கமலேஷை கம்பால் தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த கமலேஷ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை அவர் பலியானார். இதுகுறித்து கமலேஷின தந்தை அளித்த புகாரின் பேரில் சூரஜ் ரத்தோர் உள்ளிட்டோரை கைது செய்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் பலியான கமலேஷின் சடலத்தை உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.