முகப்பு
இந்தியா

திருமண நிகழ்ச்சியில் இரு பிரிவினரிடையே தகராறு - ஒருவர் சுட்டுக் கொலை!

ராஜஸ்தானில் திருமண நிகழ்ச்சியில் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட  தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:27 AM
பகிர்:

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் திருமண நிகழ்ச்சியில் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தகராறில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 2 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் மாடல்வாஸ் கிராமத்தில் பாபுலால் என்பவரின் மகளின் திருமணம்  கடந்த செவ்வாயன்று (நவ.28) நடைபெற்றது.

இந்த நிலையில், அன்றிரவு திருமண விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டிஜே ஆடல் பாடல் நிகழ்ச்சியில், உறவினர்கள் அனைவரும் உற்சாகமாக நடனமாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, திருமண விழாவில் கலந்துகொண்ட  இருதரப்பினரிடையே  வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிதுநேரத்தில் வாய்த்தகராறு கைகலப்பாக மாறியுள்ளது.

இந்தநிலையில், ஒரு தரப்பை சேர்ந்த நபர், திடீரென எதிர்தரப்பினரை நோக்கி தன் கையிலிருந்த துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார். அதில் படுகாயமடைந்த ஆமன் யாதவ் என்ற 22 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மேலும், நவீன்(25)  மற்றும் விகாஸ்(22) ஆகிய இருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த நபரின் உடல், உடற்கூராய்வுக்குப்பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக உள்ள அந்த நபரை தேடி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →