கோப்புப்படம் 
இந்தியா

செல்போனில் 13,000 நிர்வாணப் படங்கள்! கைதானவர் அளித்த ஷாக்

செல்போனில் பெண்களின் மார்ஃபிங் செய்யப்பட்ட 13,000 நிர்வாணப் படங்களை வைத்திருந்தவர் கைது.

DIN


பெங்களூரு: தனது செல்போனில் பெண்களின் மார்ஃபிங் செய்யப்பட்ட 13,000 நிர்வாணப் படங்களை வைத்திருந்தக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்ட 25 வயது இளைஞர், அது தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூருவில் இயங்கி வரும் தனியார் நிறுவன ஊழியர் ஆதித்யா சந்தோஷ்.  இவரை பெங்களூரு சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். இந்த நிறுவனத்தில் கடந்த 5 மாதங்களாக நுகர்வோர் சேவை பிரிவில் பணியாற்றி வந்துள்ளார்.

இவர் தனது செல்போனில் நிர்வாணப் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து, அதை தன்னுடன் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களின் புகைப்படங்களைப் போல் மார்ஃபிங் செய்வதை வழக்கமாக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர் இந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளாரா என்ற கோணத்திலும், இந்தப் புகைப்படங்களைக் காட்டி பெண்களை மிரட்டியிருக்கிறாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இவரது 22 வயது காதலி, இவரது செல்போனை ஆராய்ந்தபோதுதான், இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  இவரும், இவரது காதலரும் சேர்ந்திருக்கும் போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை அகற்ற, ஆதித்யாவுக்குத் தெரியாமல் அவரது செல்போனை எடுத்து, அதிலிருந்த புகைப்படங்களைப் பார்த்தபோதுதான், அதில் தான் மற்றும் தன்னுடன் பணியாற்றும் பெண்கள் உள்ளிட்ட பலரின் மார்ஃபிங் செய்யப்பட்ட 13,000 புகைப்படங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனை, அவர் தான் பணியாற்றும் நிறுவனத்துக்குத் தெரிவித்து, அதன் மூலம் சைபர் பிரிவுக்கு புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார். இதனால் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் பலரும் கலக்கமடைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT