இந்தியா

ஜார்க்கண்ட்: மின்னல் பாய்ந்ததில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜம்தாரா மாவட்டத்தில் மின்னல் பாய்ந்ததில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜம்தாரா மாவட்டத்தில் மின்னல் பாய்ந்ததில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் நாராயன்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் ஒன்றில் நிகழ்ந்துள்ளது. மாநிலத்தின் தலைநகரில் இருந்து இந்த கிராமம் 210 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக நாராயன்பூர் காவல் நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: மின்னல் பாய்ந்ததில் 40 வயது நிரம்பிய பெண் ஒருவரும், ஒன்றரை வயது மற்றும் 7 வயதுக்குட்பட்ட 3 குழந்தைகளும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விவரங்களுக்காக காத்திருக்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT