இந்தியா

மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க தலைமை ஆசிரியர் தலைமையில் நலக்குழு: மத்திய அரசு

DIN



புதுதில்லி: மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்கும் நடவடிக்கையாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் நலக்குழுக்களை பள்ளிகளில் உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டுதல் வரைவை மத்திய கல்வி அமைச்சகம் தயாரித்து வழிகாட்டுதல் வரைவு வெளியிட்டப்பட்டுள்ளது. 

சாதனை படைக்க வேண்டிய மாணவர்கள், பொதுத் தேர்வு, மருத்துவ நுழைவுத் தேர்வு மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரங்கள் மற்றும் பல்வேறு காரணங்களால் பரவலாக தற்கொலைகளில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்கும் நடவடிக்கையாக மத்திய மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசனைகளை நடத்தி வந்தது. 

இந்த நிலையில், "ஒவ்வொரு மாணவரும் முக்கியம்", என்ற அடிப்படையில் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கும் நடவடிக்கையாக, "உம்மீட்" என்னும் வழிகாட்டுதல் வரைவை மத்திய கல்வி அமைச்சகம் தயாரித்து வெளியிட்டுள்ளது. 

கூடுதலாக, பள்ளிகள், பெற்றோர்கள் மற்றும் சமூகங்கள் இடையே கூட்டாண்மைகளை வளர்ப்பது, தற்கொலைகளைத் தடுப்பதற்கும், தற்கொலை நடத்தையுடன் தொடர்புடைய களங்கத்தைக் குறைப்பதற்கும் ஒரு முக்கியமான உத்தியாக சமூக ஆதரவை வளர்ப்பது. மாணவர்களின் உணர்திறன் மற்றும் புரிதலை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதலையும் வலியுறுத்தி உள்ளது. 

அதாவது: மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்கும் வகையில் பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் பள்ளிகளில் நலக்குழு உருவாக்கப்பட வேண்டும். நலக்குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் தற்கொலை உள்ளிட்ட நெருக்கடியான சூழ்நிலைகளை கையாள்வதில் கவனம் செலுத்த வேண்டும். 

மாணவர்கள் யாரேனும் மன அழுத்தத்தில் இருந்தால் பெற்றோர் அல்லது அதனை அறிந்த சமூகத்தினரோ நலக்குழுவினரிடம் தெரிவித்து தற்கொலையை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

பள்ளியில் சக மாணவர்களுடன் ஒப்பிடுதல், தோல்வியை நிரந்தரமாகக்  கருதுதல் மற்றும் கல்வித் திறனின் அடிப்படையில் தோல்வியை நிரந்தரம் என எண்ணி அதிலிருந்து மீள முடியாமல் தவித்தல், படிப்பதற்கு பயப்படுதல், வெற்றி அளவீடு குறித்த பயங்கள் உள்ளிட்டவற்றை களைவதற்கு முயற்சிக்க வேண்டும். 

காலியாக உள்ள வகுப்பறைகளை பூட்டி வைத்தல், இருண்ட தாழ்வாரங்களில் மின் விளக்குகளை ஒளிரச் செய்தல், தோட்ட பகுதிகளை சுத்தமாக பராமரித்தல் போன்றவற்றை பின்பற்றப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT