கோப்புப்படம் 
இந்தியா

டிக்கெட் ரத்து கட்டணத்தை தள்ளுபடி செய்த ஏர் இந்தியா!

முன்பதிவு செய்த விமானப் பயணச்சீட்டை ரத்து அல்லது மாற்றியமைப்பதற்கான கட்டணத்தை அக்டோபர் 31 வரை ரத்து செய்வதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

DIN

இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு முன்பதிவு செய்த விமானப் பயணச்சீட்டை ரத்து அல்லது மாற்றியமைப்பதற்கான கட்டணத்தை அக்டோபர் 31 வரை ரத்து செய்வதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் மோதலைத் தொடர்ந்து இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகருக்குச் செல்லும் விமானங்களை அக்டோபர் 14-ஆம் தேதி வரை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது.

இந்த நிலையில், டெல் அவிவ் நகரில் இருந்து புறப்படும் அல்லது பிற பகுதிகளில் இருந்து அந்த நகரத்துக்கு இயக்கப்படும் விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் தங்களின் டிக்கெட்டை ரத்து செய்தாலோ அல்லது பயண தேதியை மாற்றியமைத்தாலோ அதற்கான கட்டணம் வசூலிக்கப்படாது என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

அக்டோபர் 31-ஆம் தேதி வரை பயணம் செய்வதற்கு, அக்டோபர் 9-ஆம் தேதிக்கு முன்பாக வழங்கப்பட்ட பயணச்சீட்டுகளுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி செல்லுபடியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடைசி ஒருநாள்: 212 ரன்கள் இலக்கை துரத்தும் பாகிஸ்தான்; தொடரை முழுமையாக கைப்பற்றுமா?

பஞ்சாபில் ஆர்எஸ்எஸ் தலைவரின் மகன் சுட்டுக்கொலை!

வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

தில்லி கார் வெடிப்பு: தற்கொலைப் படைத் தாக்குதல் - என்ஐஏ அறிவிப்பு

மின்னல் பார்வை... தாரணி!

SCROLL FOR NEXT