முகப்பு
இந்தியா

உத்தரகண்ட் பித்தோராகரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4  ஆகப் பதிவு

உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டம் அருகே திங்கள்கிழமை காலை 9.11 மணியளவில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:09 AM
பகிர்:

பித்தோராகர்: உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டம் அருகே திங்கள்கிழமை காலை 9.11 மணியளவில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் பித்தோரகத்தில் இருந்து வடகிழக்கே 48 கிலோமீட்டர் தொலைவில், 5 கிலோமீட்டர் ஆழத்திலும் இருந்தது. நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. 

முன்னதாக அக்டோபா் 5 ஆம் தேதி, உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதிகாலை 3.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது மற்றும் நிலநடுக்கத்தின் ஆழம் 5 கிமீ ஆக பதிவாகி இருந்ததாக தேசிய நில அதிா்வு மையம் தெரிவித்திருந்தது.

தொடா்ச்சியான பூகம்பங்களுக்குப் பிறகு, 6.2 ரிக்டா் அளவு கொண்ட வலுவான நிலநடுக்கம், நேபாளத்தை அதிா்ச்சிக்குள்ளாக்கியது. நில அதிா்வு தீவிரமான பகுதியில் இந்தியா அமைந்துள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →