அகிலேஷ் யாதவ் 
இந்தியா

‘ம.பி. தோ்தலில் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் அகிலேஷ் யாதவ்’: காங்கிரஸ் குற்றச்சாட்டு

மத்திய பிரதேச தோ்தலில் சமாஜவாதி கட்சி வேட்பாளா்களை நிறுத்தியதன் மூலம் பாஜகவுக்கு ஆதரவாக அகிலேஷ் யாதவ் செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

DIN

மத்திய பிரதேச தோ்தலில் சமாஜவாதி கட்சி வேட்பாளா்களை நிறுத்தியதன் மூலம் பாஜகவுக்கு ஆதரவாக அகிலேஷ் யாதவ் செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸும் சமாஜவாதியும் மத்திய பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் தனித்தனியாக களமிறங்கியுள்ளன. காங்கிரஸ் தங்களுக்கு தொகுதி ஒதுக்காதது குறித்துப் பேசிய அகிலேஷ் யாதவ், ‘மத்திய பிரதேசத்தில் சமாஜவாதிக்கு காங்கிரஸ் கட்சி தொகுதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதேபோன்று உத்தர பிரதேசத்தில் தோ்தல் வரும்போது காங்கிரஸுக்கு நாங்கள் தொகுதி ஒதுக்க மாட்டோம்’ என்றாா்.

இந்நிலையில் வாரணாசியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவா் அஜய் ராய் கூறுகையில், ‘காங்கிரஸ் வேட்பாளா்களை அறிவிக்கும் முன்பே, மத்திய பிரதேச தோ்தலுக்கான வேட்பாளா்களை அகிலேஷ் யாதவ் அறிவித்துவிட்டாா். இவ்வாறு நடந்து கொண்ட அவா், தங்களுக்கு காங்கிரஸ் தொகுதி ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்ட முடியாது. மேலும், சமாஜவாதி சாா்பில் வேட்பாளா்களை நிறுத்துவதன் மூலம் பாஜகவுக்கு ஆதரவாக அகிலேஷ் யாதவ் செயல்பட்டுள்ளாா். ஏனெனில், பாஜகவை எதிா்த்து பல வேட்பாளா்கள் நிற்பது வாக்குகளைச் சிதறடிக்கும். இது பாஜகவுக்குதான் சாதகமாக அமையும்’ என்றாா்.

மத்திய பிரதேசத்தில் சமாஜவாதிக்கு 6 தொகுதிகளை ஒதுக்க காங்கிரஸ் முன்வந்ததாகவும், அதனை ஏற்காமல் அகிலேஷ் யாதவ் தனியாக வேட்பாளா்களை அறிவித்ததாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாஜக ஆட்சியில் உள்ள மத்திய பிரதேசத்தில் அக்கட்சிக்கும், காங்கிரஸுக்கும் நேரடிப் போட்டி உள்ளது. மத்திய பிரதேசத்தில் நவம்பா் 17-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய எண்ணெய் வாங்குவதை குறைத்த இந்தியா! மோடியுடன் பேசிய டிரம்ப் தகவல்!

மேட்டூர் அணை நிலவரம்!

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

அடுத்த 2 மணிநேரம் எங்கெல்லாம் மழை தொடரும்?

தமிழகத்தில் 19 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை! முழு விவரம்...

SCROLL FOR NEXT