இந்தியா

ஜம்முவில் சிக்கித்தவித்த 2 சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

DIN

பனிப்பொழிவு காரணமாக ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சிந்தன் பகுதியில் சிக்கித் தவித்த 2 சுற்றுலாப் பயணிகளை போலீஸார் பத்திரமாக மீட்டுள்ளனர்.

அனந்த்நாக்கில் இருந்து கிஷ்த்வார் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஞ்சாபைச் சேர்ந்த சிந்தன் பகுதியில் சிக்கித் தவிப்பதாக போலீஸாருக்கு அழைப்பு வந்தது.

அதன்பிறகு, மூத்த காவல் கண்காணிப்பாளர் கலீல் போஸ்வால் உத்தரவின்பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகளாக பியூஷ் விஜ் மற்றும் முகமது ஷரீப் ஆகியோர் பத்திரமாக மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

சுற்றுலாப் பயணிகள் இருவரும் நலமுடன் இருப்பதாகவும், உடனடியாக எங்களுக்கு உதவிய போலீஸாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தொலைதூர அல்லது உயரமான பகுதிகளுக்குப் பயணிக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறும், குறிப்பாகக் கணிக்கமுடியாத காலநிலையைக் கருத்தில்கொண்டு சுற்றுலாப் பயணிகள் கவனமுடன் இருக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மசினகுடியில் ரேஷன் கடையின் ஷட்டரை மீண்டும் உடைத்த காட்டு யானை

காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்: கடைகளுக்கு அபராதம் விதிப்பு

அதிக மகசூலுக்கு கோடைஉழவு மேற்கொள்ள அறிவுறுத்தல்

குன்னூா்-கோத்தகிரி  சாலையில்   மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

பலா பழங்களை ருசிக்கும் யானை

SCROLL FOR NEXT