இந்தியா

அரபிக்கடலில் உருவானது 'தேஜ்' புயல்

DIN

தென்மேற்கு அரபிக் கடலில் ‘தேஜ்' புயல் உருவானதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று (அக்.2) காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. 

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று(அக். 21) காலை புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது மேலும் வலுவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து அக். 25 ஆம் தேதி தெற்கு ஓமன் மற்றும் அதனை ஒட்டிய ஏமன் கடலோரப் பகுதிகளுக்கு நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

இந்த புயல் சின்னத்திற்கு இந்தியா வழங்கிய 'தேஜ்' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இந்த புயலினால் முதலில் குஜராத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தற்போது ஓமன் நோக்கி நகருவதால் குஜராத்துக்கு பாதிப்பில்லை என்றும் குஜராத்தில் அடுத்த 7 நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT