தெலங்கானா தேர்தல்: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
தெலங்கானா பேரவைத் தேர்தலுக்காக 52 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.
தெலங்கானா பேரவைத் தேர்தலுக்காக 52 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.
தெலங்கானா சட்டப்பேரவைத் தோ்தல் நவம்பா் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் முதல்வா் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் களமிறங்கியுள்ளது. அவரது கட்சிக்கும், காங்கிரஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
தேர்தலையொட்டி அனல் பறக்கும் பிரசாத்தில் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 52 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. இதில் மூன்று எம்.பிக்களும், எம்எல்ஏக்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க- தெலங்கானா எம்.எல்.ஏ. ராஜா சிங் மீண்டும் பாஜகவில் சேர்ப்பு
எம்எல்ஏ ராஜா சிங் கோஷமஹால் தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுகிறார். இவர், முகமது நபிகள் குறித்து அவதூறு கருத்து தெரித்தமைக்காக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு இன்று மீண்டும் பாஜகவில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.