இந்தியா

ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு!

DIN

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் நேற்று (அக்டோபர் 22) இரவு 11 மணியளவில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி இருந்தது. 

இந்த நிலநடுக்கம் 5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இத்தகவலை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதனால் கட்டிட இடிபாடுகள் எதுவும் ஏற்பட்டனவா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.  

ஏற்கனவே நேபாளத்தில் நேற்று (அக்டோபர் 22) காலை 7.24 மணிக்கு 5.3 ரிக்டர் அளவிலும், மாலை 5.18 மணிக்கு 4.3 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

இதனால் பல வீடுகள் முழுவதுமாக அல்லது பகுதியாக இடிந்து விழுந்ததாக தகவல்கள் வெளியாகின. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் நேபாள மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். வீடுகளுக்கு செல்ல தயங்கி வீதிகளில் இருந்து வருகின்றனர்.

நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களைத் தொடர்ந்து தற்போது ஜம்மு காஷ்மீரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏரியில் மூழ்கி வடமாநில உயிரிழப்பு

சித்திரமே... சித்திரமே...

இருவர் அரைசதம்: லக்னௌ அணிக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!

சுந்தரி.. கேப்ரெல்லா!

தீராக் காதல்! ஜான்வி கபூர்..

SCROLL FOR NEXT