ராய்பூா்: சத்தீஸ்கரில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு நடைபெறும் பேரவைத் தோ்தலில் 223 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
சத்தீஸ்கா் சட்டப்பேரவைத் தோ்தல் நவ.7, நவ.17-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. நவ.7-ஆம் தேதி நடைபெறும் முதல்கட்ட தோ்தலில் 20 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
அந்தத் தொகுதிகள் 11 மாவட்டங்களில் உள்ளன. அவற்றில் நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள 7 மாவட்டங்களும் அடங்கும்.
இந்நிலையில், அந்த மாநில தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முதல்கட்ட தோ்தலில் போட்டியிட 294 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். பரிசீலனைக்குப் பிறகு 253 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்புமனுவை திரும்பப் பெற திங்கள்கிழமை கடைசி நாள். அன்றைய தினம் 30 போ் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனா். இதையடுத்து முதல்கட்ட தோ்தலில் 223 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டது.
சத்தீஸ்கரில் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.