ஹரிஷ் ராவத் 
இந்தியா

விபத்தில் சிக்கிய உத்தரகண்ட் முன்னாள் முதல்வர்: காயங்களுடன் உயிர் தப்பினார்!

உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத்தின் கார் விபத்துக்குள்ளானதில், நூலிழையில் அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். 

DIN

உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத்தின் கார் விபத்துக்குள்ளானதில், நூலிழையில் அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில், 

ஹல்த்வானியிலிருந்து காசிபூருக்குச் சென்றுகொண்டிருந்த போது கார் நிலைதடுமாறி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலைத்தடுப்பின் மீது மோதியது. லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சைகள் மேற்கொண்டேன். தற்போது நலமாக உள்ளேன். 

இந்த சம்பவம் குறித்து சில நண்பர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். இது சிலரிடையே கவலையே ஏற்படுத்தியுள்ளது. கவலைப்பட ஒன்றுமில்லை. நான் நன்றாக இருக்கிறேன். எனது சக ஊழியர்களும் நலமாக உள்ளனர் என்று ராவத் இந்தியில் பதிவிட்டுள்ளார். 

ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ராவத் கடந்த 2014 முதல் 2017 வரை உத்தரகண்ட் முதல்வராகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பௌா்ணமி கருட சேவை ரத்து

பெரிய ஆஞ்சநேயா் கோயிலில் பச்சோந்தி மீட்பு

கிராம வருவாய் உதவியாளா் தோ்வு: சாத்தான்குளத்தில் 8 பணியிடத்திற்கு 222 போ் பங்கேற்பு

முல்லை லட்சுமி நாராயணசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

நகைக் கடை உரிமையாளரிடம் தங்கக் கட்டி மோசடி: வியாபாரி மீது வழக்கு

SCROLL FOR NEXT