இந்தியா

பிரதமர் மோடியின் முகப்பு படமாக மாறிய ஜி20 மண்டபம்!

ஜி20 மாநாடு நடைபெறவுள்ள பாரத் மண்டபத்தை தனது சமூகவலைதள பக்கத்தின் பின்புல படமாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (செப். 8) மாற்றியுள்ளார். 

DIN


ஜி20 மாநாடு நடைபெறவுள்ள பாரத் மண்டபத்தை தனது சமூகவலைதள பக்கத்தின் பின்புல படமாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (செப். 8) மாற்றியுள்ளார். 

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள பாரத் மண்டபத்தின் முன்பு நடராஜர் சிலை இருப்பதைப் போன்ற படத்தை பிரதமர் தனது எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தில் மாற்றியுள்ளார். இதற்கு முன்பு மூவர்ணக்கொடியை வைத்திருந்தார். 

ஜி-20 மாநாடு தில்லியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (செப்.9, 10) நடைபெறுகிறது. இதற்காக ஜி-20 கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் தலைநகர் தில்லிக்கு வருகை புரிந்துள்ளனர். 

தில்லி பிரகதி திடலில் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூரோ, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கால்ஸ், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டசில்வா, செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். 

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், சீன அதிபர் ஸி ஜின்பிங் ஆகியோர் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு பதிலாக அந்நாடு சார்பில் அவர்களின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT