இந்தியா

உ.பி.: கோசி தொகுதியில் சமாஜவாதி வேட்பாளர் வெற்றி

உத்தர பிரதேச மாநிலம் கோசி தொகுதி இடைத்தேர்தலில் சமாஜவாதி வேட்பாளர் சுதாகர் சிங் வெற்றி பெற்றுள்ளார்.  

DIN

உத்தர பிரதேச மாநிலம் கோசி தொகுதி இடைத்தேர்தலில் சமாஜவாதி வேட்பாளர் சுதாகர் சிங் வெற்றி பெற்றுள்ளார். 

உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், உத்தரகண்ட், கேரளம், திரிபுரா ஆகிய 6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. 

இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலம் கோசி தொகுதி இடைத்தேர்தலில் சமாஜவாதி வேட்பாளர் சுதாகர் சிங் வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தாரா சிங் சௌஹானை விட 42,759 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

சமாஜவாதி வேட்பாளர் சுதாகர் சிங் 1,24,427, பாஜக வேட்பாளர் தாரா சிங் 81,668 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்த வெற்றியின் மூலம் கோசி தொகுதியை சமாஜவாதி கட்சி தக்கவைத்துள்ளது. பாஜக வேட்பாளர் தாரா சிங் சௌகான் கடந்த 2022 தேர்தலில் சமாஜவாதி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

அவர் பாஜகவுக்கு மாறியதால் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அவர் அதில் தோல்வியைத் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேஸிங்கில் வரலாறு.! இறுதிப்போட்டியில் இந்திய அணி!

33 ஆண்டுகளுக்குப் பிறகு! அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு டிரம்ப் உத்தரவு?

நடிகர் ஆமிர் கானுக்கு பிரபல கார்ட்டூனிஸ்ட் ‘ஆர்.கே. லக்‌ஷ்மணன்’ விருது!

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT