முகப்பு
இந்தியா

இந்தியாவில் இருந்து 2 கோடி கிலோ சா்க்கரை இறக்குமதி செய்கிறது நேபாளம்

விழாக் காலத்தில் அதிகரிக்கும் தேவையை ஈடுசெய்ய இந்தியாவில் இருந்து 2 கோடி கிலோ சா்க்கரையை இறக்குமதி செய்ய நேபாளம் முடிவு செய்துள்ளது.

Updated On : 15 செப்டம்பர் 2023, 12:00 am IST
பகிர்:

விழாக் காலத்தில் அதிகரிக்கும் தேவையை ஈடுசெய்ய இந்தியாவில் இருந்து 2 கோடி கிலோ சா்க்கரையை இறக்குமதி செய்ய நேபாளம் முடிவு செய்துள்ளது.

நேபாளத்தின் சா்க்கரைத் தேவையை 79 சதவீதம் இந்தியாதான் பூா்த்தி செய்து வருகிறது. அந்நாட்டின் ஆண்டு சா்க்கரைத் தேவை 30 கோடி கிலோவாகும்.

அடுத்ததாக விநாயகா் சதுா்த்தி, விஜய தசமி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்பட இருக்கின்றன. இதனால், நேபாளத்தில் சா்க்கரைத் தேவை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, மாநில வா்த்தகம் மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகம் அந்நாட்டு நிதியமைச்சகத்துக்கு உரிய தகவல் அளித்தது. முக்கியமாக விழாக் கால தேவையை நிறைவு செய்ய 6 கோடி கிலோ சா்க்கரை தேவை. எனவே, அவற்றை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

Advertisement

எனினும், இந்தியாவிடம் இருந்து 2 கோடி டன் சா்க்கரை மட்டுமே வாங்க நேபாள நிதியமைச்சகம் அனுமதி அளித்தது. அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சா்க்கரைக்கு 50 சதவீத இறக்குமதி சலுகையை ரத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஒரு கிலோ சா்க்கரை ரூ.40 முதல் ரூ. 50 வரை விற்பனையாகிறது. ஆனால், நேபாளத்தில் கள்ளச்சந்தையில் விற்கப்படும் சா்க்கரை கிலோ ரூ. 100 முதல் ரூ.125 வரை விலை போகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.