ராஜ்கோட் நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி, வீட்டுப்பாடம் எழுதாததால், டியூஷன் செல்வதிலிருந்து தப்பிக்க கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியது தெரிய வந்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலையில், காவல்நிலையத்துக்கு தந்தையுடன் வந்த 10 வயது சிறுமி, தான் டியூஷன் சென்று கொண்டிருந்தபோது, ஒரு கார் அருகில் வந்து, தன்னைக் கடத்திச் சென்றதாகவும், அதபோல போகும் வழியில் மற்றொரு சிறுமியையும் கடத்தியதாகவும் கூறியிருக்கிறார்.
பிறகு, ஒரு ரயில்வே மேம்பாலம் அருகே அந்தச் சிறுமியை இறக்கிவிட்டுவிட்டு, தன்னை காரில் கடத்திச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க.. மகளிா் உரிமைத் தொகையை கபளீகரம் செய்த வங்கிகள்: ரூ.1,000 பறிபோனதால் தவித்த பயனாளிகள்
இதனைக் கேட்ட காவல்துறையினர், சிறுமி சொன்ன இடத்தில் சோதனை நடைபெற்றது. ஒட்டுமொத்த நகரும் காவல்துறை கண்காணிப்பின் கீழ் வந்தது. அனைத்துக் காவல்நிலையங்களுக்கும் எச்சரிக்கை அனுப்பப்பட்டு, சாலைகளில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
கிரைம் பிரிவு அதிகாரிகளும் காவல்நிலையத்துக்கு வந்து, தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டது. சிறுமி சொன்னதுபோன்ற எந்தக் காட்சியும் அதில் பதிவாக வில்லை. ஒரு காட்சியில் சிறுமி தனியாக நடந்து செல்வது மட்டுமே பதிவாகியிருந்தது. இதையடத்து, சிறுமியிடம் காவல்துறையினர் பேச்சுக்கொடுத்தனர்.
அப்போது, தான் கடத்தல் நாடகம் ஆடியதை சிறுமி ஒப்புக்கொண்டார். அவருக்கு டியூஷன் செல்வதே பிடிக்காத நிலையில், அன்று வீட்டுப்பாடமும் எழுதாததால் இந்த கடத்தல் நடகத்தை நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.