இந்தியா

நாளை காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம்!

DIN


புதுதில்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் நாளை திங்கள்கிழமை(செப்.18) நடக்கிறது.

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. 

அதன்படி, தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் திடீரென கர்நாடக அரசு தண்ணீரை நிறுத்தி விட்டது.

இந்த நிலையில் 2 ஆவது கட்டமாக 15 நாள்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்துக்கு திறந்துவிட காவிரி ஒழுங்காற்று குழு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. 
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். மேலும் அனைத்துகட்சி அவசர ஆலோசனை கூட்டமும் நடந்தது. இதில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கூறிவிட்டனர். மேலும் இது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடக அரசின் நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ் சிங் கடிதம் எழுதினார்.

இதனிடையே காவிரி ஒழுங்காற்று குழு  பரிந்துரைத்த பிறகும் கர்நாடகம் தண்ணீர் தர மறுப்பது குறித்து தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த அவசர மனு மீதான விசாரணை வருகிற 21 ஆம் தேதி நடக்கிறது. எனவே அதற்கு முன்னதாகவே காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலமாகவே நீர் பங்கீட்டு விவகாரத்தை தீர்த்துக்கொள்ள கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து மத்தியஅமைச்சர் கஜேந்திர சிங்கின் உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம்
நாளை திங்கள்கிழமை (செப்.18) நடைபெறும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் அறிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நாளை நடைபெறுவதால் அதில் தமிழகத்தின் நிலை குறித்து அதிகாரிகள் எடுத்து கூறுவார்கள். அதன்பேரில் காவிரி மேலாண்மை ஆணையம் நியாயமான உத்தரவை பிறப்பிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்!

பாரிஸில் அஹானா கிருஷ்ணா!

வார பலன்கள்: 12 ராசிக்கும்..

உ.பி.யை நோக்கி 'இந்தியா' புயல்! மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்! ராகுல் பேச்சு

விழுப்புரத்தில் 94.11% தேர்ச்சி: மாநில அளவில் 6ம் இடம்!

SCROLL FOR NEXT