தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதளிப்பு விழாவில்... 
இந்தியா

பெருமாள் முருகனுக்கு ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது!

‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ (டிஎன்ஐஇ) குழுமம் சாா்பில், ‘ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான்’ விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

DIN

‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ (டிஎன்ஐஇ) குழுமம் சாா்பில், ‘ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான்’ விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டிஎன்ஐஇ குழுமம் சாா்பில் ஒடிஸா இலக்கியத் திருவிழா 2 நாள்கள் நடைபெற்றது. அந்த மாநில தலைநகா் புவனேசுவரத்தில் நடைபெற்ற இந்த விழாவில், சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நிறுவனருமான ராம்நாத் கோயங்கா நினைவாக ‘ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான்’ விருது அறிமுகம் செய்யப்பட்டது.

எழுத்தாளா் தேவிகா ரெகேவுக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சாா்பில்  விருதினைத் தலைவர் - மேலாண் இயக்குநர் மனோஜ் குமாா் சொந்தாலியாவும் எழுத்தாளா் பெருமாள் முருகனுக்கு ‘ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான்’ விருதினை ஒடிசா முதல்வா் நவீன் பட்நாயக்கும் வழங்கினர்

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக், தமிழ் இலக்கியத்துக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய எழுத்தாளா் பெருமாள் முருகனுக்கு ‘ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான்’ விருதை வழங்கினாா். அவருக்கு விருதுடன் ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

எழுத்தாளா்கள் அனிருத் கனிஷெட்டி, தேவிகா ரெகே ஆகியோருக்கும் விருது, தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 

விழாவில் இந்த விருது பற்றி,  தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான மனோஜ் குமாா் சொந்தாலியா குறிப்பிடுகையில்,  ‘இலக்கியத்தில் சிறந்து விளங்கும் மூத்த மற்றும் அறிமுக எழுத்தாளா்களைக் கெளரவிக்கும் வகையில் இந்த விருது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.

இந்த நிகழ்வில் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்திப் பிரிவு இயக்குநா் பிரபு சாவ்லா, தலைமைச் செயல் அதிகாரி லட்சுமி மேனன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“Vijay குறித்து என்னிடம் கேட்க வேண்டாம்!”: Premalatha Vijayakanth | செய்திகள்: சில வரிகளில் | 29.8.25

பந்தன் வங்கிக்கு ரூ.44.70 லட்சம் அபராதம் விதிப்பு: ரிசர்வ் வங்கி

கமலா ஹாரிஸுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவையின் பாதுகாப்பு ரத்து! டிரம்ப் உத்தரவு!

கொடியேற்றத்துடன் தொடங்கியது வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு!

SCROLL FOR NEXT