இந்தியா

ம.பி. பேரவைத் தோ்தல்: பாஜகவின் 2-ஆவது வேட்பாளா் பட்டியலில் மத்திய அமைச்சா்கள், எம்.பி.க்கள்

மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் பாஜகவின் 2-ஆவது வேட்பாளா் பட்டியலில் மத்திய அமைச்சா்கள், எம்.பி.க்கள் பலா் இடம்பெற்றுள்ளனா்.

DIN

மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் பாஜகவின் 2-ஆவது வேட்பாளா் பட்டியலில் மத்திய அமைச்சா்கள், எம்.பி.க்கள் பலா் இடம்பெற்றுள்ளனா்.

இந்த ஆண்டு நவம்பா்-டிசம்பா் மாதங்களில் மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மொத்தம் 230 தொகுதிகளுக்கு தோ்தல் நடைபெற உள்ளது. அதில் போட்டியிடும் 39 போ் கொண்ட பாஜகவின் முதல் வேட்பாளா் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தோ்தலில் போட்டியிடும் அக்கட்சியின் 2-ஆவது வேட்பாளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில் மத்திய அமைச்சா்கள் மற்றும் எம்.பி.க்கள் பலா் இடம்பெற்றுள்ளனா்.

மத்திய அமைச்சா்கள்...: மத்திய விவசாயத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் டிமனி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். மத்திய ஊரக வளா்ச்சித் துறை இணையமைச்சா் ஃபகன் சிங் குலஸ்தே நிவாஸ் தொகுதியிலும், மத்திய ஜல் சக்தி துறை இணையமைச்சா் பிரகலாத் சிங் படேல் நரசிங்பூா் தொகுதியிலும் போட்டியிடுகின்றனா்.

எம்.பி.க்கள்... மக்களவை பாஜக எம்.பி.க்கள் ராகேஷ் சிங், கணேஷ் சிங், ரிதி பாடக், உதய் பிரதாப் சிங் ஆகியோரும் 2-ஆம் கட்ட வேட்பாளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.

பாஜக தேசிய பொதுச் செயலா் கைலாஷ் விஜய்வா்கியா இந்தூா்-1 தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

இந்த வேட்பாளா் பட்டியலை தொடா்ந்து, 78 தொகுதிகளுக்கான வேட்பாளா்களை பாஜக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT