கோப்புப்படம் 
இந்தியா

கேரளத்தில் நிபா பாதித்த 4 பேரும் குணமடைந்தனர்: வீணா ஜார்ஜ்

நிபா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று வந்த 9 வயது சிறுவன் உள்பட நான்கு பேரும் குணமடைந்ததாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

DIN


கோழிக்கோடு: கேரளத்தில் நிபா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று வந்த 9 வயது சிறுவன் உள்பட நான்கு பேரும் குணமடைந்ததாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில், தற்போதைக்கு புதிதாக நிபா வைரஸ் பாதிப்பு எதுவும் கண்டறியப்படாத நிலையில், இந்த நல்ல தகவலை அமைச்சர் பகிர்ந்துகொண்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய வீணா ஜார்ஜ், நிபா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நான்கு பேருக்கும் இரண்டு முறை மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, இரண்டு முறையுமே நிபா தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுவிட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் மொத்தம் ஆறு பேருக்கு நிபா வைரஸ் பாதிக்கப்பட்டது. அதில் இரண்டு பேர் பலியான நிலையில், நான்கு பேரும் குணமடைந்துள்ளனர்.

ஆகஸ்ட் 30ஆம் தேதி நிபா வைரஸ் பாதித்து மரணமடைந்த நபர்தான், கேரளத்தின் முதல் நிபா நோயாளியாகக் கண்டறியப்பட்டார். அவரிடமிருந்துதான் மற்ற ஐந்து பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாய்ப்புகள் காத்திருக்கு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் பணியில் ‘ஏஐ’

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விஜய்யிடம் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவை திமுக கூட்டணியைப் பாதிக்காது: காா்த்தி ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT