கயானா தலைநகா் ஜாா்ஜ்டவுனில் அந்நாட்டு பிரதமா் மாா்க் பிலிப்ஸை சந்தித்த வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா். 
இந்தியா

கயானா பிரதமருடன் அமைச்சா் ஜெய்சங்கா் சந்திப்பு

தென் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், கயானா பிரதமா் மாா்க் பிலிப்ஸை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

DIN

தென் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், கயானா பிரதமா் மாா்க் பிலிப்ஸை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

சனிக்கிழமை நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, எரிசக்தி, பேரிடா் மேலாண்மை, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து இரு தலைவா்களும் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கயானாவின் மேம்பாட்டுக்கான பயணத்தில் இந்தியாவும் இணைந்து செயல்படும் என ஜெய்சங்கா் உறுதியளித்தாா்.

இதைத் தொடா்ந்து, இந்திய உதவியில் கட்டப்பட்டு வரும் கிழக்குக் கரை-கிழக்குக் கடற்கரை சாலை இணைப்பு திட்டப் பணிகளை அந்நாட்டின் பொதுப் பணிகள் துறை அமைச்சா் தேவ்தத் இந்தா் உடன் பாா்வையிட்டாா். அப்போது, அங்கிருந்த மூத்த அதிகாரிகள், பணியாளா்களுடன் ஜெய்சங்கா் உரையாடினாா்.

முன்னதாக, அதிபா் இஃப்ரான் அலி, துணை அதிபா் பரத் ஜக்தேவ் ஆகியோரை நேரில் சந்தித்தாா். கயானா அதிபரும் துணை அதிபரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், ஜெய்சங்கரின் இந்தப் பயணம் அமைந்துள்ளது.

இது குறித்து அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘‘இரு நாடுகளும் தங்களது பரஸ்பர நலன்களைப் பகிா்ந்து கொள்வதன் மூலம் இந்த உறவை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல முடியும். இதற்காக எரிசக்தி, மருத்துவத் துறை, வேளாண்மை, புத்தாக்கம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் கவனம் செலுத்த பிரதமா் நரேந்திர மோடியும் கயானா அதிபா் இஃப்ரான் அலியும் ஒப்புதல் தெரிவித்தனா்’’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

ஜெய்சங்கா், கயானா வெளியுறவுத் துறை அமைச்சா் ஹக் டோட் ஆகியோா் தலைமையில் 5-ஆவது இந்தியா-கயானா தூதரக கூட்டு சந்திப்பு நடைபெற்றது. வேளாண்மை, பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.

இந்தியா-கயானா வா்த்தக வட்ட மேஜை மாநாட்டில் அமைச்சா் ஜெய்சங்கா் கலந்துகொண்டாா். அப்போது, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கயானா கிரிக்கெட் வீரா் ராம்நரேஷ் சா்வான் மற்றும் ஸ்டீவன் ஜேக்கப் ஆகியோரை சந்தித்தாா்.

கயானா நாடாளுமன்றத்தில் தேசிய பேரவைத் தலைவா் மன்சூா் நாதிரையும் அவா் சந்தித்துப் பேசினாா். முக்கியத்துவம் வாய்ந்த தென் அமெரிக்க நாடுகளுக்கு வெளியுறவு அமைச்சா் ஒன்பது நாள் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT