5வது நாளாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி!
மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்றத்தில் 5வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்றத்தில் 5வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களவை அலுவல்படி கேள்வி நேரம் வழக்கம்போல் செயல்படும் என சபநாயர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து நோட்டீஸ் மீது சபாநாயகர் இன்னும் முடிவெடுக்கவில்லை.
ஆனால், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வழக்கம்போல் பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் விவகாரம் குறித்துப் பேச வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நாடாளுமன்றத்தில் பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மழைக்காலக் கூட்டத்தொடரில் வழக்கம்போல் 11 முதல் 12 மணி வரை கேள்வி நேரம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மணிப்பூர் விவகாரம் பேசப்படும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.