முகப்பு
இந்தியா

கர்நாடகத் தேர்தல்: 130 தொகுதிகளைக் கடந்தது காங்கிரஸ்!

கர்நாடக பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 130 இடங்களைக் கடந்து முன்னிலை பெற்று வருகிறது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:47 AM
கோப்புப் படம்
பகிர்:

கர்நாடக பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 130 இடங்களைக் கடந்து முன்னிலை பெற்று வருகிறது. 

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று(சனிக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, காங்கிரஸ் கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, மேலும் 128 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. 

பாஜக - 66, மஜத - 22, சுயேச்சை -3, பிற கட்சிகள் - 2 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. 

காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளதையடுத்து நாடு முழுவதும் காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →