முகப்பு
இந்தியா

தலித் மக்களை வாக்குவங்கியாக மட்டுமே காங்கிரஸ் பயன்படுத்துகிறது: சந்திரசேகர ராவ் விமர்சனம்!

தலித் மற்றும் இஸ்லாமிய மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே காங்கிரஸ் கட்சி பயன்படுத்தி வருகிறது என தெலங்கானா முதல்வர் குற்றச்சாட்டு.

Updated On : 28 அக்டோபர், 2023 at 11:09 AM
சந்திரசேகர் ராவ்
பகிர்:

தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஆளும் பாரத ராஷ்டிர சமிதி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

வனபர்த்தி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது: “விவசாயிகள் நலனில் பாஜகவை போலவே காங்கிரஸ் கட்சிக்கும் அக்கறை இல்லை. 

இஸ்லாமியர்கள் மற்றும் தலித் மக்களின் நலன்களுக்காக மத்திய பாஜக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அவர்களுக்காக குரல் கொடுப்பதாக காங்கிரஸ் கட்சி சொல்லிக் கொள்கிறது. 

Advertisement

ஆனால், சுதந்திரத்திற்கு பிறகு மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்துள்ளது. இருந்தபோதிலும் தலித் மக்களின் நலனுக்காகவோ, இஸ்லாமிய மக்களின் நலனுக்காகவோ எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. தலித் மற்றும் இஸ்லாமிய மக்களை வாக்கு வங்கியாக மட்டுமே காங்கிரஸ் கட்சி பயன்படுத்தி வருகிறது” என்று குற்றம் சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.