இந்தியா

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

DIN

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எந்த மாற்றத்தையும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆா்பிஐ) மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.5 சதவிகிதமாக தொடரும் என ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்கள் மீதான வட்டி உயராமல் பழைய நிலையே நீடிப்பதாக அவர் தெரிவித்துள்ள்ளார்.

பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது எனவும், பொருளாதார வளர்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளதாகவும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த ரெப்போ வட்டி விகிதம் 7-வது முறையாக மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரள முதல்வர் வேட்பாளராக சசி தரூர்..? ராகுல், கார்கேவுடன் சந்திப்பு!

மகாராஷ்டிர அமைச்சரவையில் அஜீத் பவார் மனைவிக்கு இடம்: வலுக்கும் கோரிக்கை!

ஆஸி. ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சபலென்கா புதிய சாதனை!

கல்வி மாநாட்டில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! 11,815 பேருக்கு வேலைவாய்ப்பு!

அஜீத் பவார் விமான விபத்து: மத்திய அமைச்சர் பதில்!

SCROLL FOR NEXT