இந்தியா

19 கிலோ கஞ்சா மாயம்: எலிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜார்க்கண்ட் காவல்துறை

19 கிலோ கஞ்சா மாயம்: எலிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜார்க்கண்ட் காவல்துறை

இணையதளச் செய்திப் பிரிவு

தன்பாத்: பல்வேறு குற்றச் சம்பவங்களில் பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 19 கிலோ கஞ்சாவையும் எலிகள் சாப்பிட்டுவிட்டதாக நீதிமன்றத்தில் ஜார்க்கண்ட் காவல்துறை தெரிவித்திருப்பது எலிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த சனிக்கிழமை, தன்பாத் நீதிமன்றத்தில், 19 கிலோ கஞ்சாவை கடத்தியதாக இருவர் கைது செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்த கஞ்சாவை காவல்துறையினரால்நீதிமன்றத்க்குக் கொண்டு வரப்படவில்லை. இது குறித்து நீதிபதி காவல்துறையிடம் கேட்டதற்கு, காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 19 கிலோ கஞ்சாவையும் எலிகள் சாப்பிட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

2018ஆம் ஆண்டு தந்தை, மகன் இருவர் கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டள்ளனர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, ராஜ்கஞ்ச் காவல்நிலையத்தின் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான், 19 கிலோ கஞ்சாவையும் எலிகள் சாப்பிட்டுவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்ட நீதிபதி, பறிமுதல் செய்த கஞ்சா இல்லாவிட்டால், அது குற்றவாளிகளுக்கு சாதகமாகிவிடாதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

காவல்துறை கிடங்கின் பொறுப்பாளர்களிடம் இது பற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா!

ஓடிடியில் கண்ணப்பா!

ஓடிடியில் நடிகர் தர்ஷனின் சரண்டர்!

போலி விண்வெளி வீரரின் காதலில் விழுந்த மூதாட்டி! ரூ. 6 லட்சத்தை இழந்தார்!

GST வரிகள் குறைப்பு! TV, AC வாங்குபவர்கள் கவனத்திற்கு! | Nirmala Sitharaman | BJP

SCROLL FOR NEXT