இந்தியா

ஊழல்வாதிகள் சிறைக்குச் செல்வது உறுதி: இது மோடியின் உத்தரவாதம்!

DIN

ஊழல்வாதிகள் சிறைக்குச் செல்ல நேரிடும், எந்த மிரட்டலுக்கும் தாம் பின்வாங்கப் போவதில்லை எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ராஜஸ்தானின் கரௌலியில் நடைபெற்ற பேரணியில் மோடி பேசினார். மாநிலத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள ஊழல்வாதிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இதனால்தான் தனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் "இந்தியா" கூட்டணியை அமைத்துள்ளனர் என்றார்.

ஊழலை ஒழிப்போம் என்று கூறுபவர்கள் ஒரு பக்கமும், ஊழல்வாதிகளைக் காப்பாற்றுங்கள் என்று கூறுபவர்கள் மற்றொரு பக்கமும் உள்ளனர்.

ஊழல்வாதிகளைக் காப்பாற்றுபவர்கள் கவனமாகக் கேளுங்கள், மோடிக்கு எத்தனை மிரட்டல்கள், பிரச்னைகளை கொடுத்தாலும் ஊழல்வாதிகள் சிறைக்குச் செல்வது உறுதி இது மோடியின் உத்தரவாதம் என்று அவர் கூறினார்.

2024 மக்களவைத் தேர்தல் யார் எம்.பி.யாக வரப்போகிறார்? என்பது பற்றியதல்ல.. விக்சித் பாரத் என்ற தீர்மானத்துக்குப் புதிய ஆற்றலைத் தருவதேயாகும்.

உறவுமுறையிலும் ஊழலிலும் திளைக்கும் காங்கிரஸ், மக்களின் நிர்ப்பந்தத்தில் ஆதாயம் தேடுகிறது. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளில் கூட கொள்ளையடிப்பதற்கான வாய்ப்புகளைக் கண்டறிந்தது. ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசில் வினாத்தாள் கசிவு வளர்ச்சியடைந்தது என்றார்.

மேலும், தனது வாழ்வின் ஒவ்வொரு நொடியும் நாட்டுக்காக அர்ப்பணிப்பதாகவும், மோடி ஓய்வெடுக்கவோ, வேடிக்கை பார்க்கவோ பிறந்தவர் அல்ல. மோடி கடுமையாக உழைக்கிறார். ஏனெனில் நாட்டு மக்களுடன் இணைக்கப்பட்ட மிகப்பெரிய இலக்குகளைக் கொண்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4 மாவட்டங்களில் பேரிடா் மீட்புப் படை

தேனியில் பலத்த மழை

மாரடைப்பால் உயிரிழந்த காவல் ஆய்வாளரின் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம்

கம்பத்தில் பைக்குகள் திருட்டு: 4 போ் கைது

கூடலூா் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி: உடலை வாங்க 3-ஆவது நாளாக உறவினா்கள் மறுப்பு

SCROLL FOR NEXT