அமர்நாத் பனி லிங்கம் 
இந்தியா

அமர்நாத் புனித யாத்திரை ஜூன் 29 ஆம் தேதி தொடங்குகிறது!

2024 ஆம் ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை வரும் ஜூன் ஆம் தொடங்கி ஆகஸ்ட் 19 ஆம் தேதி முடிவடைகிறது.

DIN

அனந்த்நாக் (ஜம்மு-காஷ்மீர்): 2024 ஆம் ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை வரும் ஜூன் ஆம் தொடங்கி ஆகஸ்ட் 19 ஆம் தேதி முடிவடைகிறது. யாத்திரைக்கான முன்பதிவு ஏப்ரல் 15 முதல் தொடங்குவதாக ஸ்ரீ அமர்நாத் கோயில் வாரியம் தெரிவித்துள்ளது.

அனைத்து இந்து தெய்வங்களிலும், சிவபெருமான் இந்தியர்களால் மட்டுமல்ல, பிற நாடுகளிலும் வணங்கப்படுகிறார். ஒவ்வொரு ஆண்டும் கோடை மாதங்களில் தெற்கு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் தனித்துவமான வடிவத்தில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் நடந்து வருகின்றனர்.

இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை வரும் ஜூன் ஆம் தொடங்கி ஆகஸ்ட் 19 ஆம் தேதி முடிவடைகிறது. யாத்திரைக்கான முன்பதிவு ஏப்ரல் 15 முதல் தொடங்குகிறது என்று ஸ்ரீ அமர்நாத் கோயில் வாரியம் தெரிவித்துள்ளது.

அமர்நாத் யாத்திரை என்பது ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சிவ பக்தர்களால் மேற்கொள்ளப்படுகிறது.

2024 ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரைக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்யும் நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள், ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் மலை மீட்புக் குழுக்கள் சிறப்புப் பயிற்சி பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமர்நாத் குகையை அடைய இரண்டு மலையேற்றப் பாதைகள் உள்ளன. பால்டால் வழியாக குறுகிய பாதை, ஸ்ரீநகர் வழியாக செல்லும் பாரம்பரிய வழி என இரண்டு வழியாக பக்தர்கள் செல்கின்றனர். இந்த இரண்டு வழிகளிலும் முக்கியமான இடங்களில் பக்தர்களுக்கு உதவுவதற்காக வீரர்கள் நிறுத்தப்பட்டு வருகிறார்கள்.

அமர்நாத் யாத்திரை குறித்து ஜம்மு காஷ்மீர் எம்ஆர்டி குழு பொறுப்பாளர் ராம் சிங் சலாத்தியா பேசுகையில், "ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீ அமர்நாத் யாத்திரை ஜூன் மாதம் தொடங்கி சுமார் இரண்டு மாதங்கள் நீடிக்கும். பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நடந்து வருகின்றனர்.

பக்தர்களுக்கு உதவுவதற்காக "வீரர்களுக்கு மலைப் பகுதிகளில் முழுமையான பயிற்சி அளிக்கப்படுகிறது, இதனால் வீரர்கள் எந்த பேரழிவையும் எளிதில் சமாளிக்க முடியும் மற்றும் யாத்திரை பயணத்தின் போது சிரமத்தில் உள்ள மக்களுக்கு விரைந்து உதவ முடியும்," என்று அவர் கூறினார்.

யாத்திரையின் போது "முக்கியமான பகுதிகளில் ராணுவ வீரர்கள் நிறுத்தப்படுவார்கள்.எந்தவொரு அவசர நிலை ஏற்பட்டாலும் பக்தர்களுக்கு உதவ அவர்கள் தயாராக உள்ளனர்,தொடர்ந்து கடினமாக உழைத்து புதிய தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை சோதித்து வருகின்றனர்" என்றார்.

ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த வீரர்கள் 3,880 மீட்டர் உயரமுள்ள புனித குகை கோவியில் உள்ள புனித குகையின் இரு வழிகளிலும் குறிப்பிடப்பட்ட இடங்களில் நிறுத்தப்படுவார்கள்.

மேலும் பக்தர்களுக்கு தனது குழுவினர் முழுமையான வசதிகளை செய்து தருவதால் எந்தவித சிரமமும் இன்றி பயணிக்க முடியும் என்றார்.

"ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவுவதில் குழு முன்மாதிரியாக உள்ளதாகவும், அவர்கள் 2022 பேரழிவில் முக்கிய பங்கு வகித்தனர்" என்று தனது அணியை பாராட்டிய சலாத்தியா, ஜம்மு காஷ்மீரின் புவியியல் சூழலை மனதில் கொண்டு, வீரர்களுக்கு எந்தவொரு பேரிடரையும் சமாளிக்கும் திறன் கற்பிக்கப்படுகிறது. நிலச்சரிவுகள், வெள்ளம், தீ விபத்துகள் மற்றும் சாலை விபத்துகள் போன்றவற்றின் போது மீட்பு நடவடிக்கைகள் உட்பட, பேரிடர் மேலாண்மைக்கு தேவையான பல்வேறு திறன்களை இந்தப் பயிற்சி முறை உள்ளடக்கியுள்ளது.

கயிறு பாலம் கட்டுதல், ஆபத்தான இடங்களில் இருந்து காயமடைந்த நபர்களை பாதுகாப்பாக மீட்பது, மற்றும் பிற உயிர்காக்கும் நுட்பங்கள் குறித்து பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இது தவிர, பயணிகளுக்கு முதலுதவி அளிக்கும் வகையில் சில ராணுவ வீரர்களுக்கு மருத்துவப் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.

சலாத்தியா மேலும் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் காவல்துறையில் இதுவரை 1,300 வீரர்கள் முழுமையான பயிற்சியை பெற்றுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாடா பவர் லாபம் ரூ.1,262 கோடியாக அதிகரிப்பு!

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்தியாவுக்கு எதிராக பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை!

SCROLL FOR NEXT