கொலை ஆயுதம் திருப்புளி: ஆதாரங்கள் சிதைவு, தொடரும் விசாரணை!
தில்லியில் இரட்டை கொலை: ஆதாரங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. விசாரணை சவால்
கிழக்கு தில்லியில் சகோதரர் மற்றும் சகோதரி இருவரும் கொலை செய்யப்பட்ட வழக்கில் குடும்பத்தாரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
30 வயதான பள்ளி ஆசிரியை கம்லேஷ் கோல்கர் மற்றும் அவரது தம்பி 17 வயதான ராம் பிரதாப் சிங் ஆகிய இருவரின் உடல் கிழக்கு தில்லியில் உள்ள சாகர்புர் பகுதியில் புதன்கிழமை காலை கண்டறியப்பட்டது. இவர்கள் திருப்புளி (ஸ்க்ரூ டிரைவர்) கொண்டு கொல்லப்பட்டிருக்கலாம் என காவலர்கள் சந்தேகிக்கின்றனர்.
குடும்ப உறுப்பினர்கள் கொடுக்கிற தகவல்களிலும் பல குழறுபடிகள் இருப்பதாகவும் சம்பவ இடத்திலுள்ள ஆதாரங்கள் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
கம்லேஷின் கணவர் ஸ்ரீயன்ஷ் குமார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தவுள்ளதாக கிழக்கு தில்லி டிசிபி அபூர்வா குப்தா தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் அலசப்படுவதாகவும் குற்றவியல் மற்றும் தடவியல் ஆய்வு குழு சம்பவ இடத்தில் ஆதாரங்களைத் தேடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக காவலர்கள் தெரிவித்தனர். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட திருப்புளி சிறிது தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.