-
இந்தியா

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்' என்று கூறியிருக்கிறார் பிரதமர் மோடி.

பிடிஐ

அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் சிலைப் பிரதிஷ்டை விழாவுக்கு அனுப்பப்பட்ட அழைப்புகளை நிராகரித்த சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக விமரிசித்துப் பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

இரண்டு இளவரசர்கள் இணைந்து நடிக்கும் இந்தியா கூட்டணியை உத்தரப்பிரதேச மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இணைந்து வைத்திருக்கும் கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும், இவர்கள் நமது நம்பிக்கையை உடைத்தெறிகிறார்கள்,

ஏற்கனவே மக்களால் நிராகரிக்கப்பட்ட இவர்கள் இணைந்து மீண்டும் நடிக்கிறார்கள். இவர்களை மக்கள் மீண்டும் புறக்கணிக்க வேண்டும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டபோது, சமாஜ்வாதியும், காங்கிரஸ் கட்சியும் சிலைப் பிரதிஷ்டை விழாவுக்கு அனுப்பிய அழைப்பிதழை நிராகரித்தனர். நாள்தோறும் இவர்கள் ராமர் கோயிலையும் சநாதன தர்மத்தையும் அவதூறாகப் பேசி வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக இன்று தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் சேர்த்து 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அடுத்தக்கட்ட தேர்தல் நடைபெறவிருக்கும் தொகுதிகளில் முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேகமாக செல்லும் சீர்திருத்த எக்ஸ்பிரஸ்...! பட்ஜெட் குறித்து மோடி!

ஒரு ஆண்டில் எத்தனை இ-செலான் பெற்றால் ஓட்டுநருக்கு ஆபத்து?

பட்ஜெட் எதிர்பார்ப்பு! தங்கம் விலையைக் குறைக்கும் திட்டம் இருக்குமா?

144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு - ஒரு அலசல்

அஜீத் பவாரின் இறுதி ஊர்வலம்! சாலைகளில் மலர்தூவி மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT