ராகுல் காந்தி ANI
இந்தியா

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் நரேந்திர மோடி: ராகுல்

DIN

பிரதமர் நரேந்திர மோடிதான், ஊழல் பள்ளியை நடத்துகிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறிள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் ஊழல் செய்வது எப்படி என்று சொல்லிக்கொடுக்கும் பள்ளியை நடத்தி வருகிறார். ஒட்டுமொத்த ஊழல் அறிவியல் என்ற பாடத்தின் கீழ், அவரே ஒவ்வொரு பாடத்தையும் 'நன்கொடை வணிகம்' உள்பட அனைத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார் என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சோதனை நடத்தி அவர்களிடமிருந்து நன்கொடை வசூலிப்பது எப்படி? நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு அவர்களுக்கு வழங்கப்படுகின்றன? ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் சலவை இயந்திரம் எப்படி வேலை செய்கிறது? விசாரணை அமைப்புகளை பறிக்கும் முகவர்களாக்குவதன் மூலம் 'பிணை மற்றும் சிறை' விளையாட்டுகளை எப்படி விளையாடுவது?" என்று வயநாட்டில் தேர்தலில் போட்டியிடும் காந்தி கூறினார்.

ஊழலின் கூடாரமாக்கிவிட்ட பாஜக, அதன் தலைவர்களுக்கு இந்த பாடத்தில் கிராஷ் கோர்ஸ்கள் கட்டாயமாக்கியிருக்கிறது. அதற்கான கட்டணத்தை இந்த நாடு செலுத்துகிறது என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா கூட்டணி அரசு மத்தியில் அமைந்ததும், இந்த ஊழல் பள்ளியைப் பூட்டி, இந்தப் பாடத்தை ஒழித்துக் கட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நன்கொடை பத்திரம் விவகாரத்தில், ராகுல் காந்தியை பிரதமர் மோடி ஊழலில் சாம்பியன் என்று விமரிசித்திருந்ததற்கு பதிலாக, ராகுல் காந்தி எதிர்வினையாற்றியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 9,520 உயர்வு!

இனி ஏடிஎம்களில் ரூ. 10, 20, 50 நோட்டுகள்!

யுஜிசியின் புதிய விதிமுறைகள் சாதியப் பாகுபாட்டை ஒழிக்கும்! முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

கொலம்பியாவில் விமான விபத்து! எம்.பி. உள்பட 15 பேர் பலி!

பாராமதியில் அஜீத் பவாருக்கு இன்று இறுதிச் சடங்கு! ஏற்பாடுகள் தீவிரம்!

SCROLL FOR NEXT