இந்தியா

இந்தியா கூட்டணியை அச்சுறுத்தும் பாஜக: கார்கே

இந்தியா கூட்டணியை தொடர்ந்து அச்சுறுத்த பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

DIN

இந்தியா கூட்டணியை தொடர்ந்து அச்சுறுத்த பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சார்பில் ராஞ்சியில் இன்று புரட்சிப் பேரணி என்ற பெயரில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அதில் இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர். ஆம் ஆத்மி சார்பில் சிறையிலுள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மனைவி சுனிதா கேஜரிவால், சிறையிலுள்ள ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் ஆகியோரும் பங்கேற்றனர்.

இதில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, மக்களவைத் தேர்தலில் 400 இடங்கள் 500 இடங்கள் என பாஜக சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் இம்முறை இந்தியா கூட்டணியின் சக்தி மிகவும் உறுதியாகவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, இந்தியா கூட்டணி சக்தியை ஒன்றும் செய்ய முடியாது. அந்த அளவுக்கு கூட்டணி கட்சிகளின் பலம் கைகொடுத்துள்ளது.

தொடர் கைது நடவடிக்கைகள் மூலம் இந்தியா கூட்டணி கட்சியினரை பாஜகவினர் அச்சுறுத்த முயற்சிக்கின்றனர். ஹேம்ந்த் சோரன், அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோரை சிறை வைத்துள்ளது பாஜக. இந்த அச்சுறுத்தல்களுக்கு இந்தியா கூட்டணி ஆஞ்சாது என அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் பயணிகள் கனிவான கவனத்திற்கு..! அக். 1 முதல் ஐஆர்சிடிசி ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!

மேட்டூர் அணை நீர்வரத்து: இன்றைய நிலவரம்!

சென்னையில் விடிய, விடிய பெய்த கனமழை! மயிலாப்பூரில் 80 மி.மீ. மழை பதிவு!

ஃபிடே செஸ்: தமிழக வீராங்கனைக்கு முதல்வா் வாழ்த்து

அண்ணா பிறந்த நாள்: எடப்பாடி பழனிசாமி தலைமையில் மரியாதை

SCROLL FOR NEXT