கோப்புப்படம்
கோப்புப்படம் 
இந்தியா

ஹைதராபாத்தில் 4 லட்சம் தெரு நாய்கள்: மாதம் இருவர் ரேபிஸுக்கு பலி!

DIN

ஹைதராபாத் மாநகரில் ஒரு நாளுக்கு 70 பேரை தெருநாய்கள் கடிப்பதாகவும், மாதம் சுமார் இருவர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத் தெருக்களில் சுமார் 4 லட்சம் நாய்கள் சுற்றி வருவதாகவும், அதில் 90,000 நாய்களுக்கு கருத்தடை செய்யப்படாமல் இருப்பதாகவும் கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2022-ல் 19,847 பேரும், 2023-ல் 26,349 பேரும் தெருநாய் கடித்து பாதிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு ஏப்ரல் 17ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 9,208 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த 4 மாதத்துக்குள் மட்டும் 8 பேர் தெருநாய் கடித்ததில் ரேபிஸ் நோயால் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒவ்வொரு மாதமும் 3,000 முதல் 4,000 ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.

ஹைதராபாத்தில் மட்டும் கடந்த 2019 முதல் 5 ஆண்டுகளில் ரேபிஸ் நோய் ஏற்பட்டு 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

உணவு மற்றும் போதிய தண்ணீர் கிடைக்காததால் தெரு நாய்கள் மக்களை கடிப்பதாகவும், அதனை தடுக்கும் நோக்கில் மாநகர் முழுவதும் 4,800 இடங்களில் நாய்களுக்கு தண்ணீர் கொடுக்க தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் அரசு கால்நடை மருத்துவமனை ஏற்பாடு செய்துள்ளது.

மேலும், கருத்தடை செய்யாத நாய்களை பிடிக்க 50 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 2007ஆம் ஆண்டு 7.5 நாய்கள் இருந்ததாகவும், தற்போது 3.97 லட்சம் நாய்களாக குறைந்துள்ளதாகவும் கால்நடை மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT