தெலங்கானாவில் 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில், ஜனவரி 9 ஆம் தேதி அளிக்கப்பட்ட புகாரில், விலங்கு நல ஆர்வலர்கள் அதுலாபுரம் கௌதம், ஃபர்சானா பேகம் ஆகியோர் ஜனவரி 6 ஆம் தேதி முதல் மூன்று நாள்களில் ஷியாம்பேட்டை மற்றும் அரேபள்ளி கிராமங்களில் 300 தெருநாய்கள் கொல்லப்பட்டதாகக் குற்றம்சாட்டினர்.
கிராம பஞ்சாயத்து செயலாளர்கள் உள்ளிட்டோர் இரண்டு நபர்களை வேலைக்கு அமர்த்தி நாய்களுக்கு விஷம் கொடுத்து பின்னர் அவற்றின் உடல்களை கிராமங்களின் வெளிப்புறங்களில் வீசியதாக அந்த ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
புகாரின் அடிப்படையில், 1960 ஆம் ஆண்டு விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் ஷியாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.