காங்கிரஸ் கட்சிக்கு நியாபக மறதி ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பேசிய அவர், சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் போட்டியின்றி எம்.பி.யாக தேர்வாகியுள்ளார். இதனை காங்கிரஸ் கட்சியால் ஏற்க முடியவில்லை. ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுவிட்டதாக பொய்பிரசாரத்தை செய்து வருகிறது.
காங்கிரஸ் கட்சியில் 20 முறை போட்டியின்றி வேட்பாளர்கள் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு நியாபக மறதியா? காங்கிரஸ் இதனை மறந்துவிட்டதா? அப்போது ஜனநாயகம் எப்படி இருந்தது என சொல்ல முடியுமா?
காங்கிரஸ் கூற்றுப்படி, பாஜகவை சேர்ந்த எம்.பி. போட்டியின்றி தேர்வானால் மட்டும் ஜனநாயகத்துக்கு ஆபத்து வந்துவிடுகிறது. போட்டியே இல்லாமல் எம்.பி. தேர்வானது குறித்து காங்கிரஸ் உள்பட, சமாஜவாதி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கருத்துகளைத் தெரிவிக்கின்றன.
இதில் ஏதேனும் பிரச்னை இருப்பதாக உணர்ந்தால், அவர்கள் தேர்தல் ஆணையத்தை அனுகலாமே என கேள்வி எழுப்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.