அமலாக்கத் துறையை ஏவி விட மத்திய அரசு திட்டம்: ராகுல்
என் மீது அமலாக்கத்துறையை ஏவி விட மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளதாக ராகுல் தெரிவித்துள்ளார்.
சக்ரவியூக உரைக்குப் பிறகு தனக்கு எதிராக அமலாக்கத்துறையை ஏவி விட மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சக்கர வியூகத்தால் நாடெங்கிலும் அச்சம் மிகுந்த சூழ்நிலை நிலவுகிறது; அந்த சக்கர வியூகத்தை ’இந்தியா' கூட்டணி தகர்க்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
Advertisement
இதுதொடர்பாக இன்று ராகுல் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
திறந்த கரங்களுடன் காத்திருப்பதாகவும், உங்களை வரவேற்கிறேன். எனது சக்ரவியூகத்தின் பேச்சு சிலருக்குப் பிடிக்கவில்லை என்றும் கூறினார்.
இதனால் என் மீது அமலாக்கத்துறையை ஏவி விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக எனக்கு தகவல்கள் வந்திருக்கிறது என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து பாஜக அரசு அரசியல் துன்புறுத்தலுக்காக அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமானவரி போன்ற அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.