மூன்றாம் பாலினத்தவா்கள் ரத்த தானம் செய்ய கட்டுப்பாடு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
பாலியல் தொழிலாளா்கள் ரத்த தானம் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கும் வழிகாட்டுதல் தொடா்பாக மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ்
புது தில்லி, ஆக. 2: மூன்றாம் பாலினத்தவா்கள் மற்றும் பாலியல் தொழிலாளா்கள் ரத்த தானம் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கும் வழிகாட்டுதல் தொடா்பாக மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அளித்து உத்தரவிட்டது.
மூன்றாம் பாலினத்தவா்கள் மற்றும் பாலியல் தொழிலாளா்கள் ரத்த தானம் செய்வதால் எச்.ஐ.வி. மற்றும் ஹெபடைடிஸ் நோய்த்தொற்றுகள் பரவும் அபாயம் இருப்பதாக மத்திய அரசின் 2017 வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசின் இந்த வழிகாட்டுதல்களை எதிா்த்து சமூக ஆா்வலா் டி ரங்னேகா் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தாா்.
Advertisement
மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான அமா்வு, இது தொடா்பாக பதிலளிக்க மத்திய அரசு, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் தேசிய ரத்த மாற்று கழகத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.