வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார் மோகன்லால் 
இந்தியா

வயநாட்டில் லெப். கர்னல் மோகன்லால்!

மீட்புப் பணிகள் குறித்து ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார்

DIN

லெட். கர்னல் மோகன்லால் வயநாட்டிற்கு சென்று நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.

கேரளத்தின் வயநாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) அதிகாலை பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் மண்ணில் புதையுண்டு நூற்றுக்கணக்காணோர் உயிரிழந்த நிலையில், இன்னும் மீட்புப் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், துணை ராணுவத்தின் லெப்டினன்ட் கர்னலாக இருக்கும் நடிகர் மோகன்லால், மேப்பாடியில் உள்ள தற்காலிக இராணுவ முகாமில் இராணுவ அதிகாரிகளுடன், மீட்புப் பணிகள் குறித்து கலந்துரையாடல் நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து, வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலைக்கு, இராணுவ வாகனத்தில் சென்று ஆய்வு செய்தார்.

வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் மண்ணில் புதையுண்டு நூற்றுக்கணக்காணோர் உயிரிழந்த நிலையில், சனிக்கிழமை மேலும் பல உடல்கள் கண்டெடுக்கப்பட்டதால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 346 ஆக உயர்ந்துள்ளதாகவும், 250-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என தகவல்கல்கள் வெளியாகியுள்ளது.

மண்ணில் புதையுண்டவா்களை மீட்கும் பணியிலும், சாலியாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவா்களின் உடல்களைத் தேடும் பணியிலும் ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசியப் பேரிடா் மீட்புப் படை, கடலோரக் காவல் படை, காவல் துறை, தீயணைப்புத் துறை உள்பட பல்வேறு முகமைகளைச் சோ்ந்தவா்கள் ஐந்தாவது நாளாக சனிக்கிழமை ஈடுபட்டுள்ளனா்.

நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்ட 200-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை, 1000-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT