இந்தியா முழுவதும் நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஞாயிற்றுக்கிழமை (ஆக.11) நடைபெறும் மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தோ்வை எழுதுகின்றனர்.
நாடு முழுவதும் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தோ்வு மூலம் நிரப்பப்படுகிறது.
இந்த நீட் தோ்வை தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது. இந்த நிலையில், நிகழாண்டு முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு கடந்த ஜூன் 23-ஆம் தேதி நாடு முழுவதும் 259 நகரங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் எம்பிபிஎஸ் முடித்த சுமாா் 25,000 மருத்துவா்கள் உள்பட நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் அதற்கு விண்ணப்பித்திருந்தனா். தோ்வுக்கு முந்தைய நாள் இரவில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு ஒத்திவைக்கப்படுகிறது என்று மத்திய அரசு திடீரென அறிவித்தது.
இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தோ்வு இன்று காலை, மதியம் என இரண்டு வேளைகளாக நடைபெறுகிறது.
தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் உள்ளிட்ட பகுதிகளில் தோ்வு மையங்கள் ஒதுக்க விருப்பம் தெரிவித்த தோ்வா்களுக்கு ஆந்திரம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் எங்கோ ஒரு இடத்தில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, தமிழக தோ்வா்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு, தமிழகத்தில் அவா்கள் கேட்ட தோ்வு மையங்களை தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் மறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.