பிரனய் குமார் X
இந்தியா

மயில் குழம்பு: யூடியூபில் விடியோ வெளியிட்டவர் கைது!

மயில் குழம்பு தொடர்பான காணொலி யூடியூபில் வைரலான நிலையில் நடவடிக்கை.

DIN

பாரம்பரிய மயில் குழம்பு செய்வது குறித்து விடியோ வெளியிட்ட யூடியூபர் பிரனய் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலங்கானா மாநிலம், சிரிசில்லா பகுதியை சேர்ந்தவர் கோடம் பிரனய் குமார். இவர், யூடியூப் சேனலில் சமையல் விடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் பாரம்பரிய மயில் குழம்பு செய்வது என்ற தலைப்பில் விடியோ ஒன்றை யூடியூபில் வெளியிட்டுள்ளார்.

இந்த காணொலி இணையத்தில் வைரலான நிலையில், பிரனய் குமாரின் வீட்டை சோதனையிட்ட காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் அவரை வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பிரனய் குமார் சமையலுக்கு பயன்படுத்திய இடத்தை ஆய்வு மேற்கொண்ட காவல்துறையினர், அவரின் ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

பாதுகாக்கப்பட்ட பட்டியலில் உள்ள தேசிய விலங்கான மயிலை சாப்பிட்டது உறுதி செய்யப்பட்டால், வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி, 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை பெற வாய்ப்புள்ளது.

மேலும், பிரனய் குமாரின் யூடியூப் தளத்தில் இருந்து மயில் குழம்பு தொடர்பான காணொலியையும் காவல்துறையினர் நீக்கியுள்ளனர்.

இதற்கு முன்னதாக யில் தண்டவாளத்தில் சைக்கிள், கற்கள் உள்ளிட்டவை வைத்து காணொலி பதிவிட்ட உத்தர பிரதேசத்தை சேர்ந்த யூடியூபர் ஒருவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

SCROLL FOR NEXT