இந்தியா

புது தில்லி: கள்ளநோட்டு அச்சடித்த மூவர் கைது!

ரூ. 1.40 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டன

DIN

தில்லியில் கள்ளநோட்டு அச்சடித்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

தென்மேற்கு தில்லியில் துவாரகா பகுதியில் உள்ள மெட்ரோ நிலையத்தில், கள்ளநோட்டு கடத்தல் செய்யப்படவிருப்பதாக, காவல் நிலையத்திற்கு, ஆக. 5 ஆம் தேதியில் ரகசிய தகவல் அளிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, மெட்ரோ நிலையத்திற்கு சென்ற துணை ஆணையர் அங்கித் சிங் தலைமையிலான காவல் துறையினர், கடத்தலில் ஈடுபட்ட அனஸ் கான் (20) என்பவரிடம் இருந்து, 301 போலியான ரூ. 200 நோட்டுகளைக் கைப்பற்றியதுடன், அவரையும் கைது செய்தனர்.

மேலும், அனஸ் கானிடம் விசாரணை மேற்கொண்டதில், கள்ளநோட்டு அச்சடிப்பில் ஈடுபட்ட, அமன் குமார் (25), விகாஸ் குமார் (24) ஆகிய இருவரையும் ஆக. 6 ஆம் தேதியில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து ரூ. 1.40 லட்சம் மதிப்பிலான போலி ரூ. 200 நோட்டுகள், இரண்டு அச்சு இயந்திரங்கள், ஒரு மடிக்கணினி, அச்சு மை, 3 மொபைல் போன்கள், உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், இந்த கள்ளநோட்டு கடத்தலில் ஈடுபட்டுள்ள மற்றவர்களையும் தேடி வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடந்த 100 ஆண்டுகளில் முதல் முறை; முதல் நாளிலேயே சூடுபிடித்த ஆஷஸ் டெஸ்ட் தொடர்!

ஒவ்வொரு நாளுக்கும் நன்றி... பிரியங்கா மோகன்!

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

கண் கவர மறையும் சூரியன்... ரைசா வில்சன்!

SCROLL FOR NEXT