இந்தியா

ஹிமாசல்: கனமழையால் 110 பேர் உயிரிழப்பு, ரூ. 1004 கோடி இழப்பு

46 நாள்களாக பெய்து வரும் பருவமழையால் 213 சாலைகள் மூடப்பட்டன

இணையதளச் செய்திப் பிரிவு

ஹிமாசலில் பெய்துவரும் தொடர் மழையால், மாநிலத்திற்கு ரூ. 1004 கோடி வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஹிமாசலில் ஜூன் 27 முதல் தொடங்கிய பருவமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளம் காரணமாக, அம்மாநிலத்தில் இதுவரையில் 213 சாலைகள் மூடப்பட்டுள்ளன.

கனமழை காரணமாக, சிம்லாவில் 89 சாலைகளும், சிர்மூரில் 42 சாலைகளும், மண்டியில் 37 சாலைகளும், குல்லுவில் 26 சாலைகளும், காங்க்ராவில் 6 சாலைகளும், சம்பாவில் 5 சாலைகளும், கின்னௌரில் 4 சாலைகளும், லஹால் & ஸ்பிடியில் 4 சாலைகளும் மூடப்பட்டுள்ளன என்று ஹிமாசலின் மாநில அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கனமழையால் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, ஜூன் 27 முதல் ஆக. 12 வரையிலான 46 நாள்களில், மழை தொடர்பான சம்பவங்களால் 110 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மாநிலத்திற்கு சுமார் ரூ. 1,004 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் ஆக. 19, வரையில் உள்ளூர் வானிலை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT